உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னரே அடுத்த நகர்வு; அமைச்சர் கெஹலிய

186 Views

“பௌத்த பீடங்களின் கோரிக்கை உட்பட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அடுத்தக் கட்ட நகர்வுகள் 20ஆம் திக திக்கு பின்னரே முன்னெடுக்கப்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்கசபை விடுத்துள்ள கூட்டறிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப் பட்டது. இதற்கு அவர் நேரடிப் பதிலை வழங்கவில்லை. மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.

“அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டவரைவை சவாலுக்குட்படுத்தி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரீசிலனை செய்த உயர்நீதிமன்றம் தனது சட்டவியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது. உயர்நீதிமன்றின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பார். சபாநாயகர் இவ்வாறு அறிவித்த பின்னரே 20 தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.

Leave a Reply