உக்ரைனின் மிக நெருக்கிய நட்பு நாடும்இ போரில் உக்ரைனுக்கு அதிக ஆதரவுகளை வழங்கிய நாடாகவும் விளங்கிய போலந்துக்கும் உக்ரைனுக்குமிடையிலான விரிசல்கள் அதிகரித்து வருகின்றது.
உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில் போலந்தே முன்னின்றது. உக்ரைனின் துறைமுகங்களை ரஸ்யா தக்கி அழித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் ஊடாகவே தானிய ஏற்றுமதியை மேற்கொள்ள முடியும்.
ஆனால் உக்ரைனின் தானிய இறக்குமதியை ஊக்குவித்தால் அது போலந்து விவசாயிகளை பாதிக்கும் என தெரிவித்துள்ள போலந்து ஏனைய ஐந்து நாடுகளுடன் இணைந்து அதனை தடை செய்திருந்தது.
ஆனால் அதனை ஐக்கிய நாடுகள் சபை வரை உக்ரைன் கொண்டுசென்றதால் தற்போது இரு நாடுகளுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்தப்போவதாக போலந்து பிரதமர் மத்தியூஸ் மொரொவேகி கடந்த புதன்கிழமை (20) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உடன்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும், ஆனால் எதிர்காலத்தில் ஆயுத விநியோகம் நிறுத்தப்படும் எனவும் போலந்து தெரிவித்துள்ளது. போலந்தில் அடுத்த மாதம் நேர்தல் இடம்பெறவுள்ளதால் விவசாயிகளின் நலன்களில் போலந்து அதிக அக்கறை காண்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.