உக்ரேன் போருக்கு விரைவில் முடிவு புட்டீனுடன் பேசிய ட்ரம்ப்

கடந்த 3 வருடங்களாக இடம் பெற்றுவரும் போருக்கு உட னடியான முடிவு காணப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த புதன் கிழமை(12) தெரிவித்துள்ளார். ரஸ்ய அதிபர் விளமிடீர் புட்டினுட னான தொலைபேசி உரையாட லின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதே தினம் அவர் உக்ரைன் அதிபர் வொள மிடீர் செலன்ஸ்கியுடனும் தொலைபேசி யில் பேசியிருந்தார்.
ரஸ்ய அதிபரும் – அமெ ரிக்க அதிபரும் பேசியது தற் போது இடம்பெற்றுவரும் பூகோள அரசியலில் கடுமையான ஆச்சரியத்தை தோற்றுவித்துள்ளது. உக்ரைன் விவகாரம், மத்தியகிழக்கு விவகாரம், செயற்கை நுண்ணறிவு, டொலர் விவகாரம், எரி சக்தி உட் பட பல விடயங்களைத் தான் புட்டினு டன் பேசியதாகவும், இரு தலைவர்களும் அமெரிக்காவுக்கும், ரஸ்யாவுக்கும் பயணம் செய்வது தொடர்பாகவும், உடனடியாக போரை நிறுத்து வது தொடர்பாகவும் ட்ரம்ப் தெரிவித் துள்ளார்.
அதேசமயம் ட்ரம்ப் நேரிடையாக  புட்டினுடன் தொடர்பு கொண்டது ஐரோப்பிய நாடுகளிடம் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. ஐரோப்பாவை உள்ளடக்காது உக் ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என ஈஸ்ரேனியாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை விட்டுவிட்டு பிரச்சினை தொடர்பில் ரஸ்யாவும்-அமெரிக்காவும் பேசப் போகின்றன என்ற அச்சங்கள் எழுந்துள்ள நிலையில் உக்ரைன் இல்லாத பேச்சுக்களை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். அதேசமயம்,  உக்ரைனே இந்த பேச்சுக்களில் முக்கிய பங்குதாரராக இருக்க வேண்டும் என பிரித்தானியாவின் பிரதமர் கியர் ஸ்ராமர் தெரிவித்துள்ளார்.