‘2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் ஒரு புதிய “தலைமை சூத்திரதாரி”யை உருவாக்கு அரசாங்கம் முயற்சிக்கிறது’ என்று பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.
‘அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த போதிலும் நிர்வாகத்தில் உள்ள சில நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களை தவறாக வழிநடத்த ஒரு மாற்று கதை உருவாக்கப்படுகிறது’ என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
‘உண்மையிலேயே தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய பிரதான சூத்திரதாரியை உருவாக்குவதற்கான திட்டத்தில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது’ என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
‘இந்த முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் குறிவைக்கப்படுகிறார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைச் செய்தது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கமாகும்’ என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.
‘அரசாங்க சதித்திட்டத்தில் முக்கிய சாட்சியாகக் கூறப்படும் அசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள மோசடி உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
‘எனவே. அசாத் மௌலானாவின் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை கட்டுப்படுத்துவதோடு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கம் உதவுகிறது’ என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.