ஈழ அகதிகளிற்கு குடியுரிமை வழங்க வேண்டும் – பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

339 Views

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளிற்கு இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும் குடியுரிமை திருத்தசட்டத்தை மீள பெறவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் கச்சதீர்வை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தி.மு.கவும் பா.ஜ.கவும் எதிரும் புதிருமான கட்சிகளாக இருக்கின்றன. குறிப்பாக, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் அவருக்கு எதிராக #GobackModi என்ற முழக்கம் எழுப்பப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

Leave a Reply