ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை

ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,

May be an image of text that says 'Bharatha Vanur- SABHA CONSTITUENCY TAMIL writerravikumar@gmail.com सत्यमेव जयते Dr. STANDING COMMITTEE CONSULTATIVE AGRICULTURE Delhi Residence 146, North Avenue, New Delhi 110001 RAVIKUMAR, பெறல்: மா.சுப்பிரமணியன் அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை 11.05.2021 வணக்கம் பொருள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளுக்கு சிகிச்சை அளித்தல் தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ் பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் பாதிக்கப்பட்டனர், அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கொரோனா மையத்தில் ஐந்து நாட்கள் வைத்திரு மீண்டும் முகாமிலேயே கொண்டுவந்து விட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு இப்போது உடல் நிலை மிக மோசமாக உள்ளது.மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 110522) து.ரவிக்குமார்'

“திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கும் கொரோனா மையத்தில் ஐந்து நாட்கள் வைத்திருந்து மீண்டும் முகாமிலேயே கொண்டுவந்து விட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு இப்போது உடல் நிலை மிக மோசமாக உள்ளது.மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்”இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.