ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் நாளான 14.12.2024. இல் இதன் அடிப் படையிலேயே எந்தத் தீர்வுக்கும் உழைக்க உறுதிபூணுவது ஈழத்தமிழர் கடமை!
வடகிழக்கு மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் சமூகமாக அமையப் பெற்றிருக்கிறார்கள். ஒரு தனித்துவச் சிறப்புடைய மக்கள் என்பதால் அவர்கள், உள்ளக. வெளியகக் கூறுகள் இரண்டிற்கும் உரித்தானவர்கள்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அந்நியத் தலையீடு எதுவுமின்றித் தமது அரசியல் தகைமையைத் தாமே சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ளவும், தமது சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வைத் தாமே மேம்பாடு செய்யவும் தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு. உள்ளக மக்களின் சுயநிர்ணய உரிமைக் தமிழ் கோரிக்கையை தலைவர் பிரபாகரன், 2002 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில், சிறப்பான முறை யில், கீழ்க்கண்டவாறு கூறுகிறார். “தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி, சுதந்திரமாக, கௌரவமாக வாழ விரும்புகிறார்கள்.
தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடை யாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ் விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாசை. உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது.” தமிழ் மக்கள், தமது வரலாற்றுத் தாயக மண்ணில், தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை வேண்டினார் பிரபாகரன். ஆயினும் அவர், உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்றுவிடவில்லை.
ஐ.நா. பிரகடனத்தில், அரசுகளின் கடப்பாட்டு விதியாக நெறிக்கப்பட்டிருக்கும், ‘சம உரிமைகளையும் சுயநிர்ணயத்தையும்’, பௌத்த – சிங்கள பேரினவாதச் சகதிக்குள் புதைந்து கிடக்கும் சிங்கள அரசு தமிழர்களுக்கு வழங்கிவிடப் போவதில்லை என்பது பிரபாகரனுக்கு நன்கு தெரியும். ஆகவேதான் அவர் வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்வது பற்றி ஒரு கண்டிப்பான எச்சரிக்கையை விடுக்கிறார். எமது மக்களுக்கு உரித்தான உள்ளக சுயநிர் ணய உரிமை மறுக்கப்பட்டு, பிரதேச தன்னாட்சி உரிமை நிராகரிக்கப்பட்டால், வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்து பிரிந்து சென்று தனியரசை அமைக்கத் தமிழ் மக்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என்பதையும் அம் மாவீரர் தின உரையில் அவர் அழுத்தம் திருத்தமாக அறைகூவியிருக்கிறார்.
அரச அடக்குமுறைக்கும், அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக் கும் எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் எமது விடுதலை இயக்கம். தனது அரசியற் கொள்கை நிலைப்பாட்டை. உள்ளக வெளியகக் கூறுகள் இணைந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நெறிப்படுத்தி யிருக்கிறது. சாராம்சத்தில் இந்தக் கொள்கை நிலைப் பாடு, ஐ.நா. ஐ.நா. பிரகடனங்களுக்கும். சர்வ தேசச் சட்ட நியமங்களுக்கும் இசைவாக கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. எமது நியாயமான விடுதலைப் போராட் டத்திற்குச் சர்வதேசச் சமூகத்தின் அங்கீகாரத்தை நாம் பெறுவதாயின், ஐ.நா. சாசனங்களுக்கு இசைவாக எமது போராட்டப் பாதையை நெறிப் படுத்துவது சாலச் சிறந்தது.
நன்றி: அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து…