அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home செய்திகள் ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி ‘4’: இதயச்சந்திரன்

ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி ‘4’: இதயச்சந்திரன்

எமை ஆண்ட ஏகாதிபத்தியவாதிகளாலும், வலதுசாரி தமிழ்த்தேசிய அரசியல் கனவான்களாலும் சிங்கள தேசத்திடம் தமிழ் இறைமை ஒப்படைக்கப்பட்ட நாள்.

அன்று தொடங்கிய தமிழின அடியழிப்பு, முள்ளிவாய்க்காலில் பேரழிவாக விஸ்வரூபமெடுத்தது.

இந்திய ஒன்றிய அரசாங்கங்களும் அதன் ஆளும் வர்க்கமும், உலக ஏகாபத்தியங்களும் தமக்குள் பிரிந்து கிடந்தாலும், சில தளங்களில் ஒன்றுபட்டு நின்றாலும், எமக்கு நடந்த இனப்படுகொலை குறித்து வாய் திறக்க மறுக்கின்றன.

இதற்குள் சுழியோடி எமக்கான நீதியை, சுயநிர்ணய உரிமையை பெறலாம் என்கிற கற்பிதம் கடந்த 15 வருடங்களாக எம்மவரிடையே விதைக்கப்படுகிறது.

சந்திப்புக்களும் சமூக வலைத்தளக் கூட்டங்களும் தொடர்ந்தவண்ணமுள்ளது.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மக்கள் இயக்கமொன்றின் அவசியம் குறித்து, ஒவ்வொரு தேர்தலின் பின்பும் பேசப்படுகிறது.

கட்சி மற்றும் அதிகார அரசியல் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த்தேசிய தளத்தில், மக்கள் திரள் அரசியல் பற்றிப் பேசுவதை எவரும் கவனிப்பதில்லை. கட்சி அரசியல், தமிழ்நாட்டு அரசியல் கடந்து, புதிய தளத்தில் எப்போது சிந்திக்கப் போகிறோம்?.

‘பெப்ரவரி 4, ஒவ்வொரு வருடமும் வரும்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?.

Exit mobile version