ஈழத்தமிழினத்தின் 77வது கரிநாள் பெப்ரவரி 04-பா.அரியநேத்திரன்

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு கைமாறியது 1948, பெப்ரவரி, 04ல் அது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளாக கூறபடுகிறது அதுவே ஈழத்தமிழர்களுக்கு கைவிலங்கு இட்ட கரிநாளாகும். எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ம் திகதி 77, ஆண்டு தமிழ் மக்கள் சுதந்திரம் இன்றி அந்த சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக அகிம்சைவழியிலும், ஆயுத வழியிலும், இன்று இராஜதந்திர வழியிலும் ஈழத் தமிழர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இன்னும் அந்த சுதந்திரம் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. 1948, பெப்ரவரி, 04ம் திகதி சுதந்திரம் கிடைத்து சரியாக பத்துமாதம் கடந்து முதலாவதாக செய்த வேலை மலையக்தமிழர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையாக 1948, டிசம்பர், 10ல் பிரஜா உரிமைச்சட்டம் கொண்டு

வரப்பட்டு மலையக மக்கள் வெளியேற்றப் பட்டனர். அதன் உண்மையை உள்ளார்ந்தமாக உணர்ந்த தந்தை செல்வா 1949,டிசம்பர் 18ல் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து தமிழர் களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வே என்பதை வலியுறுத்தி அதற்காக வேலைத்திட்டங்களை முன் எடுத்தார்.

அகிம்சை ரீதியான பல போராட்டங்கள் இலங்கை சுதந்திரதின நாளை ஏற்றுக்கொள்ளாத நாளாக அறிவிப்பு செய்தல் என்ற எதிர்பு போராட்டங்கள் அப்போது 1949 தொடக்கம் ஈழத்தமிழ் அரசியல் சாத்வீக போராட்டமாக மாறத்தொடங்கியது 1949 ஜனவரி இரண்டாம் வாரத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள தந்தை செல்வாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சமஸ்டி அரசியல் திட்டத்தை தந்தை செல்வா சமர்ப்பித்தார். அங்கு குழுமியிருந்த திரு.வன்னிய சிங்கம் உட்பட பல சட்டவல்லுனர்கள் அதை விவாதித்து ஏகமனதாக அங்கீகரித்தனர்.

தந்தை செல்வா இணைப்பாட்சி(சமஷ்டி)தொடர்பாக அளித்த விளக்கங்கள்“ ஒற்றையாட்சி முறை, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தை உபயோகித்து தமிழ் இனத்தை அடக்கி ஆள்வதற்கு வசதியளிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாடுகளில் ஒவ்வொரு இனமும் தாம் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் தம்மைத் தாமே ஆட்சி புரிய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவரவர்கள் சுதந்திர தனியரசாக இயங்குவதில்லை. சமஸ்டி அமைப்பாக இயங்குகின்றன.

அத்தகைய சமஸ்டி அமைப்புத்தான் இலங்கைக்குத் தேவை.”ஈழத் தமிழர்களுக்கு ஒரு சுயாட்சி, தனியரசு வேண்டும் என்பதை 75 வருடங்களுக்கு முன்னர் கூறியது இன்றும் யதார்த்த மாக நோக்கப்படுகிறது. இந்த இலட்சியத்தை அடைவதற்கு 30 வருட காலமாக அகிம்சை வழிப் போராட்டம் நடத்தினர். இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியால் இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகவே நோக்கியது அந்த நாட்களில் கறுப்பு கொடி போராட்டங்களை நடத்தியது அது வடகிழக்கு தழுவியதாக தந்தை செல்வா முன் எடுத்தார்.

1952, பெப்ரவரி, 04ம் திகதி தமிழ் மக்களின் கரிநாள் போராட்டத்தில் திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி கறுப்பு கொடி கட்டியவேளையில் 22, வயது மாணவனாக இருந்த நடராசா என்பவன் இலங்கை பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் உயிர்நீத்து இன்று 73 வருடங்களாகிறது. 1956, பெப்ரவரி, 04ல் சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்திய கையோடு சரியாக நான்கு நாட்கள் கடந்து 1956,பெப்ரவரி,08, S.W.R.D பண்டார நாயக்கா தமது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் “தனிச்சிங்களம்” நாட்டில் அமுல் படுத்துவேன் என வாக்குறுதி வழங்கினார். அந்த இனவாத கருத்துக்காக சிங்கள மக்களின் அமோக வெற்றியைப் பெற்று தனிச்சிங்களச்சட்டத்தை பாராளுமன்றில் நிறைவேற்றினார்.

இந்த சட்டம் நாடாளுமன்றில் விவாத்த திற்கு வரும் வேளை இலங்கை தமிழரசுகட்சி சத்தியாகிரக போராட்டங்களை நடத்தியது வடகிழக்கு தாயகம் எங்கும் மக்கள் எழுச்சி போராட்டங்களாக மாறியது. பல்வேறுபட்ட வடிவங்களில் அகிம்சை ரீதியிலான போராட் டங்கள், தமிழரசுக்கட்சி மாநாடுகளில் தீர்மான லங்கள், பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள் எல்லாம் தந்தை செல்வா மேற்கொண்டார்.

1957, யூலை, 26ல் பண்டா, செல்வா ஒப் பந்தம்,அடுத்து 1965,மார்ச், 24ல் டட்லி–செல்வா ஒப்பந்தம் இந்த இரண்டு ஒப்பந்தங்களும் அப்போது வரலாற்று ஆவனமாக கருதப்பட்டது. இவைகளை சிங்கள பேரினவாத அரசுகள் கிழித்தெறிந்தவரலாறு இனவாத உச்சமாக பார்க்கலாம். இவ்வாறு ஏமாற்றமடைந்த நிலையில் 1976, மே, 14ல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தந்தை செல்வா தமிழர் விடுதலை கூட்டணி ஊடாக மேற்கொண்டதும் அதனூடாக 36, விடுதலை இளைஞர்கள் இயக்கம் ஆரம்பமாகி 1987, யூலை, 29ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னர் 2009, மே 18, வரை விடுதலைப்புலிகள் தியாக போர் நடைபெற்று மௌனமானதும் வரலாறு. அதன்பின்னர் தற்போது 16, வருடங்களாக தமிழ்தேசிய தலைமை அற்ற நிலையில் ஈழ உரிமை அரசியல் இராஜதந்திர ரீதியாக சென்றுள்ளது.

தந்தை செல்வா 1949, டிசம்பர், 18ல் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியியை ஆரம்பித்து சமஷ்டி தீர்வை கேட்டு அகிம்சை போராட்டம் தொடங்கியவர், 1976, மே, 14ல் தமிழர் விடுதலை கூட்டணியை ஆரம்பித்து தமிழீழம் கேட்டு தீர்ரமானத்தை எடுத்தே 1977, ஏப்ரல், 26ல் மரணித்தார். இதில் பார்க்க வேண்டியது தந்தை செல்வா என்ற தலைவர் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றினார் ஒன்று சமஷ்டி தீர்வு, அடுத்தது தமிழீழத் தனியரசுத் தீர்வு. ஆனால் இரண்டும் இரண்டு வெவ்வேறு கட்சிகள் என்பதே உண்மை. இதில் புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்பு, மற்றும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கவேண்டிய நிலையில் எதிர்வரும் 2025, பெப்ரவரி, 04ல் 77வது இலங்கை சுதந்திரதினத்தை வழமைபோன்று கரிநாளாக அனுஷ்டித்து சர்வதேசத்திற்கு மீண்டும் நிருபிக்க அணிதிரள்வது காலத்தின்தேவை.