ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான பகிர்வுடனும் இருந்து வந்த ஈழத் தமிழர்களின் இறைமையைச் சிறிமாவோ பண்டாரநயாக்காவைப் பிரதமராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணி சோல்பரி அரசியலமைப்பையும் பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலின் கோடீஸ்வரன் வழக்குத் தீர்ப்பையும் வன்முறைப்படுத்தி, காலனித்துவ பிரித்தானிய அரசால் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாது உருவாக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற மரபு ரீதியான வளாகத்துக்கு வெளியே நவரங்கலா என்னும் மண்ட பத்தில், பாரளுமன்றம் என்ற பெயரையும் தம் விருப்புக்குச் சிறிலங்காத் தேசிய சபை என மாற்றி ஈழத்தமிழர்களின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றாத சிறிலங்காச் சிங்கள பௌத்த குடியரசு பிரகடனத்தின் மூலம் ஈழத்த மிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்த ஆக்கிரமிப்பு அரசை 22.05.1972 இல் பிரகடனப்படுத்தினர். இதன் விளைவாக அரசற்ற தேசஇனமாக்கப்பட்ட (Nation Without State) ஈழத் தமிழர்களிடம் அவர்களின் இறைமை மக்கள் இறைமையாக வந்தடைந்தமை வரலாறு.
சிறிலங்காவின் சிங்கள பௌத்த நாடாக்கும் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு ஈழத்தமிழர் களால் என்றுமே ஏற்கப்பட மாட்டாதது என்பதை உலகுக்கு வெளிப்படுத்த அக்காலத்து ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவராக விளங்கிய சா.ஜே. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பு ரிமையை 22.10.1972 இல் விட்டு விலகி அந்தத் தொகுதிகான தேர்தலை ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான அடையாளக் குடிய யொப்பமாக உலகுக்கு அறிவித்தார். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியுமான இறை மையுடன் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் தங்களில் நிலைகொண்டுள்ள இறைமையின் அடிப் படையில் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தித் தங்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவுசெய்யும் ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதி செய்யும் அரசியல் போராட்டத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப சனநாயக வழியில் இவ் அறிவிப்பு தொடக்கியது.
இதனை அடுத்து ஈழத்தமிழர்களின் பண்பாட்டு இனஅழிப்பின் மூலம் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பு ஆட்சியை உறுதிப் படுத்தவெனத் திட்டமிட்ட சிறிலங்கா அரசாங்கம் 1974ம் ஆண்டு ஜனவரி 10 நாள் யாழ்ப் பாணத்தில் நடாத்தப் பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தனது பண்பாட்டு இனஅழிப்பைத் தொடக்கி 11 ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியது. இப்பண் பாட்டு இனஅழிப்பு ஈழத்தமிழர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாப்பதற்கான ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டம் 1974 முதல் மக்கள் இறைமை நிலை கொண்டுள்ள வரலாற்றுத் தாயகத்தை மீட்டெடுக்கும் மண்மீட்புக்கான ஆயுதப் போராட்டமாகத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் பரிணாம வளர்ச்சி பெற வைத்தது.
காங்கேசன்துறை அடையாளக் குடி யொப்ப இடைத்தேர்தலை நடத்தாது மூன்று ஆண்டுகள் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடித்து 06.02. 1975இல் நடாத்திய பொழுது பெற்ற 72.55 வீத மான வாக்குகளான 25927 வாக்குகள் அளித்த 15470 பெரும்பான்மை வாக்குகளால் பெற்ற மக்கள் ஆணையைக் கொண்டு அதுவரை கால் நூற்றாண் டாக ஈழத்தமிழர் சிங்களவர் இறைமைகள் பொது வாக இருக்கும் நிலையே ஈழத்தமிழர்களின் அடிப் படை உரிமைகளை மறுத்து அடிமைகளாகச் சிங்கள அரசுக்கள் ஈழத்தமிழர்களை நடாத்த இட மளிப்பதால் சிறிலங்காப் பாராளுமனறத்தில் இருந்து விலகித் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமைப்பது தனது கட்சியின் செயற்பாடாக அமையுமென்ற ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகட
னத்தை அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய சனநாயக வழியில் சிறிலங்காப் பாராளுமன்ற அமர்வில் உலகுக்கு வெளிப்படுத்தி பாராளு மன்றத்தை விட்டு வெளியேறினார்.
இதனை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொலிசாரைப் பயன்படுத்தியும் காடையர்களைப் பயன்படுத்தி யும் மீளவும் அரசபயங்கரவாதத்தை ஈழத்தமிழர், மலையகத் தமிழர், தமிழ் பேசும் இலங்கை முஸ்லீம்கள் மேல் 1975க்கும் 1976க்குமிடை வாழ்வுக்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற் படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையாகச் செயற்படுத்தியது. சித்திரவதைகளையும் காரண மின்றிக் கைது செய்து நூற்றுக்கு மேற்பட்டோரை விசாரணையின்றித் தடுத்து வைத்தலையும் கோயிலில் வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்த வங்கி எழுதுவினைஞர் பரராசா மற்றும் மலையகத் தோட்டத் தொழிலாளி இலட்சுமணன் ஆகியோரைச் சுட்டுக் கொன்றும் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களைக் கொன்றும் வெளியில் இரண்டு முஸ்லீம்களை உயிருடன் எரித்தும் முஸ்லீம்களின் 200 வீடு களையும் 50 கடைகளையும் அழித்தும் இந்த அரசபயங்கரவாதம் இடம்பெற்றதெனச் சச்சி பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பெற்று இலண்டன் தமிழர் தகவல் மையத்தால் 1983இல் வெளியிடப்பெற்ற சிறிலங்கா – தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும் என்னும் நூல் பக்கம் 185இல் பதிவாக்கியுள்ளது.
இந்த அரசியல் சூழ்நிலையிலேயே ஈழத்தமிழர் தன்னாட்சிப் பிரகடனத்தை 1976இல் ஈழத்தமிழர்களின் முக்கிய அரசியல் கட்சிகள் தமிழர் கூட்டணியாக ஒருங்கிணந்து வட்டுக் கோட்டையில் நடாத்திய சந்திப்பில் ஏற்று அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை பண்ணாக மத்தில் நடாத்திய தமிழர் கூட்டணி மாநாட்டில் ஈழத்தமிழர்களின் அரசியல் கொள்கையாக உலகுக்கு அறிவித்து தங்கள் கூட்டணியையும் ஈழத்தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஈழத் தமிழரின் விடுதலைக்காகப் போராடும் அமைப் பாகப் பெயர் மாற்றம் செய்தன.
தொடர்ந்து 1977 இல் ஈழத்தமிழர் தாயகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலை “ஈழதேச இனம் ஏற்கனவே அவர்களிடம் நிலை கொண்டுள்ள இறைமையைப் பயன்படுத்தி ஈழதேச மக்கள் தங்களை விடுவித்துச் சுதந்திரமான, இறைமையுள்ள, மதசார்பற்ற, சோசலிச அரசை தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சனநாயக வழியிலோ அல்லது வேறு எந்த வழி களிலோ நிலைப்படுத்துவதற்கான மக்கள் ஆணை” பெறும் குடியொப்பமாகத் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்தது.
இவ்விடத்தில் தமிழர் விடுதலைக் கூட்ட ணியின் தேர்தல் கொள்கைத் திரட்டினை மீள்பதிவு செய்ய வேண்டியது சமகாலத்தின் தேவையாகிறது.
“தமிழ்த்தேசஇனம் தன்னுடைய தாயகத் தில் தன்னுடைய தன்னாட்சி உரிமையின் அடிப் படையில் தன்னுடைய இறைமையை நிலைநிறுத்த வேண்டும் என்னும் முடிவை எடுத்துள்ளது. இந்த முடிபைச் சிங்கள அரசாங்கத்துக்கும் உலகுக்கும் அறிவிப்பதற்கான ஒரே வழியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்தல் உள்ளது. அளிக்கப்படும் இவ்வாக்குகளால் தெரிவாகும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இலங்கைத் தேசிய சபையின் உறுப்பினர் கள் என்ற இருப்புடன் தங்களைத் தமிழீழத் தேசிய சபையினராகவும் கட்டமைத்து தமிழீழ அரசுக்கான அரசியலமைப்பை வரைந்து தமிழீழத்தின் சுதந்திரத்தை அந்த அரசியலமைப்பை அமைதி யான வழிகளாலோ அல்லது வேறெந்த நேரடி வழிகளாலோ அல்லது போராட்டத்தாலோ செயல் முறைக்குக் கொண்டு வருவர்”
இந்த தேர்தல் கொள்கை 86.7 வீத தமிழர் தாயக மக்கள் வாக்களிப்பில் பங்கு பற்றி 24 தொகுதிகளில் 18 தொகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்ததின் மூலம் ஈழத்தமிழ் மக்களின் குடியொப்ப ஆணையாக தமிழீழ அரசு என்பது இன்று வரை உள்ளது. இந்த மக்களாணையை முன்னெடுக்கும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டம் 1978 முதல் 2009 வரை இலங்கைத் தீவு இரு அரசுக்களின் இருப்பு என்ற வரலாற்று உண்மையின் அடிப் படையில் தமிழீழத் தேசியத்தலைவராக வேலுப் பிள்ளை பிரபாகரனை கொண்ட சீருடை தாங்கிய முப்படைகளும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் சட்டவாக்க சட்ட அமுலாக்க முறைமைகளும் நீதிமன்றங்களும் கொண்ட நடைமுறையரசை உலகுக்கு வெளிப்படுத்தியது. 1992ம் ஆண்டு உலக தந்திரோபாய அளவை நூல் “ இலங்கையில் இரு அரசுக்கள் உள்ளன அதனைக் கொழும்பு அரசு ஏற்குமா?” என்கிற கேள்வியை எழுப்பியதும் 2009ஆம் ஆண்டு: முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு வரை பல்வேறு நிலைகளில் ஈழத் தமிழர்களின் இருப்பைத் தாக்கி அழிக்கும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இன அழிப்புக்கள் வழி 31 ஆண்டுகள் சிறிலங்கா தனது ஈழத்தமிழ் மக்கள் மேலான “மக்கள் மேலான போரை” நடாத்தி இறுதியில் 17.05.2009 இல் 176000 ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனஅழிப்புச் செய்து தமிழீழ அரசின் அனைத்துக் கட்டுமானங்களையும் செயலிழக்க வைத்து அன்று முதல் இன்று வரை மீளவும் படைபலத்தின் மூலம் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறும் தந்திரேபாயத்தைத் தொடர்கின்றது.
இந்த வரலாற்று உண்மையினை மறவாது அது தந்துள்ள பாடங்களின் அடிப்படையில் சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்களின் இறை மையை மீளுறுதி செய்யும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தை தொடர வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளவர் களாகவே தமிழர் தாயகத்து எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் ஒற்றுமை யாக இல்லாவிட்டாலும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் ஒருமுகப்பட்டு அரசியல் பணி யாற்ற வேண்டியவர்களாக உள்ளனர். ஆனால் அதற்குச் சிறிலங்காவின் அரசியலமைப்பு ஆறாம் திருத்தமும் சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களும் ஈழத்தமிழரின் அடிப்படைய மனித உரிமைகளை மறுக்கின்ற சூழலில் உலகெங்கும் அரசியல் புகலிடம் கோரியும் மறுக்கப்பட்ட கல்வி தடுக்கப்பட்ட வேலை வாய்ப்புக்களாகவும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அந்த அந்த நாட்டின் குடிகளாகக் கூட தங்களின் பூர்விகத் தாயகத்துக்கானதும் அங்கு வாழும் தங்களின் கிட்டிய குடும்ப உறுப்பின ர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஊரவர்களுக்காகவும் உண்மைக்கான நீதிக்கான குரலாக ஒலிக்க முடியாமலும் புனர்வாழ்வு கனர் நிர்மாணப் பணிகளில் அடிப்படைய மனித உரிமைகளைப் பேணும் நிலையில் கூடச் செயற்பட இயலாமலும் 31 நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் போராட்ட அமைப்புக்கள் செயற்பாட்டாளர்கள் மேலான பங்கரவாதிகள் என்ற சட்டங்கள் தடுக்கின்றன.
இந்தச் சூழ்நிலை தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழ் மக்களின் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்பாடு மூலம் உலக மக்களுக்கு உண்மைகள் உணர்த்தும் செயற்பாட்டால் மட்டுமே மாற்றப்பட முடியும். இது தவிர எந்த நாடுகள் தங்கள் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்காக உலகின் பாதிக்கப்பட்ட மக்கள் இனமொன்றின் தன் தாயகத்தில் வாழ்வதற்கான போராட்டத்தைப் பிரவினையென்றும் பெரும்படைகளால் நடாத் தப்படும் அழிவை தடுக்கும் ஆயுத எதிர்ப்பைப் பயங்கரவாதம் என்றும் இந்தத் தடைகளைப் போட்டு சிறிலங்காவுக்கு தங்கள் நிபந்தனையற்ற ஆதரவுகளை எல்லா நிலையிலும் வழங்கி அதனை சிங்கள இனத்தின் நாடு, பௌத்த ஆகமச் சட்டங்களை அனைவரும் ஏற்று வாழ வேண்டிய நாடு என்ற சிறிலங்கா அரசின் ஈழத்தமிழின இறைமை மறுப்புக் கொள்கைளையும் கோட்பாடுகளையும் ஊக்கப்டுத்தி வருகின்றனவோ அவற்றுடனனோ அவற்றின் மேலாதிக்கங்கள் உள்ள எந்த ஒரு அனைத்துலக நிறவனங்கள் அமைப்புக்களுடனோ ஒட்டி உறவாடி ஈழத்தமிழர்களின் இறைமையை மீளுறுதி செய்ய முடியாது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகிலேயே மக்கள் சத்தி பெறுவதற்குத் தடையாக உள்ள அறியாமை, வறுமை என்னும் மானிடத்தின் இரண்டு பெரும் பகைமைகளுக்கு எதிரானதாகவே எப்பொழுதும் எந்தச் சூழந்நிலையிலும் எந்த அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் செயற்பாடுகள் அமைய வேண்டும். இதற்கு சமகாலத்துக்கான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அறிவுகளில் பயறிசிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இளையவர்களின் பங்களிப்புக்கு முதியவர்கள் இடமளித்து வழிகாட்லுக்கும் நெறிப்படுத்தலுக்கும் தங்கள் அனுபவங்களைப் பகிரும் பண்பாடு பரிணமிக்க வேண்டும்.
சிறிலங்கா அரசத்தலைவர் தேர்தல் மட்டு மல்ல அதன் பாராளுமன்றத் தேர்தல்களும் கூட எக்காலமும் ஈழத்தமிழர்களின் இறைமை ஒடுக் கம், தேசிய நீக்கம், பொருளாதார ஆக்கிரமிப்பு, அரசியல் பிளவுகள், ஆன்மிக மயக்கங்களை வளர்க்கின்ற தன்மை கொண்டதாகவே வரலாற் றுப் பதிவாகியுள்ளது. இதனால் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் சமஸ்டி, பதின்மூன்றாவது திருத்தம், என்கின்ற புலம்பல்களை விடுத்து ஈழத்தமிழரின் வரலாற்றின் அனுபவங்களின் உண்மைகளையும் மக்களின் விருப்புக்கள் தேவகைளின் அடிப் படையிலும் தப்பிப்பிழைக்கும் வாழ்வியல் நிலையிலும் உண்மைகளும் நீதியும் நிலைக்கத் தக்க வகையில் செயலாற்ற வேண்டிய நேரமிது என்பதை அனைவருக்கும் மீள் நினைவுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கு. ஈழத்தமிழர் இறைமையை முன்னிறுத்தி சனநாயக வழிகளில் வன்முறைகளற்று செயல்கள் மூலம் முயலுங்கள் முடியாதது என்று எதுவுமேயில்லை.