ஈரானின் கண்களுக்கு  முகமூடி போட்ட உளவாளி (பகுதி 1) – பருத்திவீரன்- வளைகுடாவில்

கேத்தரின் perez ஷக்தாம் – ஒரு பிரெஞ்சு ஊடகவியலாளர் என உலகிற்கு அறியப் பட்டவர்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மற்றும் ஷியாவை ஏற்றுக்கொண்டவர்.அவர்  ஈரானியப் புரட்சியைப் பாராட்டி னார், விலாயத்-இ-ஃபக்கியாவை ஆதரித்தார். இவரது கட்டுரைகள் கூட ஈரானின் தலைவர் அயத்துல்லா கமேனியின் இணையதளத்தில் அப்போது வெளியிடத் தொடங்கியது ஈரான் ஆனால் அவை எல்லாம் வெறும் முகத்திரைகள்…உண்மையில், மொசாத்தின் கண்கள் அதற்குப் பின்னால் ஒளிந்திருந்தன. ஈரானிய அமைப்புக்குள் இருந்து அனைத்தையும் பார்த்துக் தரவுகள் திரட்டி அனுப்பிய பெண் தான் கேத்ரின் பெரெஸ் ஷக்தாம்.
சாதாரண உளவாளி போல கேத்ரின் ஈரானில் நுழையவில்லை. மாறாக அவள் ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக மற்றும் சிந்த னையாளராக வெளிவந்தாள் அவர் அரசியல் வாதிகளை சந்தித்தார், புரட்சியின் பாதுகாவ லர்களுடன் அமர்ந்தார். இப்ராகிம் ரைசியையும் சந்தித்தார் மற்றும் “பத்திரிகையாளர் ஆராய்ச்சி” என்ற முகத்திரையின் கீழ் முக்கியமான பகுதிகளை பார்வையிட்டார் ஆனால் மிகவும் ஆபத்தான உளவு வேலையை கச்சிதமாக மொசாத்துக்கு செய்து தந்தவர்  அவரைப்பற்றிய தொகுப்புகளை இந்த கட்டுரையில் காண்போம்.
பெரெஸ்-ஷக்டம் பிரான்சில் ஒரு மதச் சார்பற்ற யூத குடும்பத்தில் வளர்ந்தார், அவரது குடும்ப பின்னணி சோகம் நிறைந்தது….கேத்தரின் பெரெஸ்-ஷக்டம் யார், அவள் எப்படி ஈரானின் உள் வட்டத்திற்குள் ஊடுருவி னாள்?
கேத்தரின் வாழ்க்கை ஆயிரத்து ஒரு இரவுகளைப் போல வாசிக்கப்படுகிறது. துனி சியாவில் நாஜி வதை முகாமில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தந்தைவழி தாத்தா, அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்…
பிரெஞ்சு எதிர்ப்பில் போராடி ஹிட்லரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒரு தாய்வழி தாத்தா, இந்த தாய் தகப்பனின் மகன் தான்.. இசிட்ரோ… இவர் தான் கேத்தரின் உடைய தந்தை….
இசிட்ரோவுக்கு யூதராக இருக்க விருப்ப மில்லை கடுமையாக யூத எதிர்ப்பு மனநிலை அடைந்ததோடு தான் எந்த மதத்தையும் ஏற்க வில்லை என மதச்சார்பற்றவனாக வாழ முடிவு செய்து அவரைப்போலவே மதச்சார்பற்ற மனைவி யோடு வாழ்ந்தார் நேர்த்தியாக வடிவ மைக்கப்பட்ட பாரசீக கம்பளத்தை விட மிகவும் சிக்கலான முறையில் பின்னப்பட்ட பிற கதைகள் ஆகியவை அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதை களில் அடங்கும் கேத்தரின் உடைய தாத்தா குடும்பம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர்கள் துனிசியாவிலேயே இருந்தனர். அவர்களின் மகன் இசிட்ரோ 18 வயதை எட்டியபோது, ​​அவர் பல்கலைக்கழகத்தில் படிக்க பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். Aish.com-க்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் கேத்தரின் கூறுவதுபோல்: “என் தந்தை தனது பெற்றோரின் துன்பங் களை அதிர்ச் சியை உண்மையில் உணர்ந்தவராக இருந்தார். அவர்கள் அனுபவித்தவற்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளவில்லை எதிர்ப்பில் போராடினார், இரண்டு முறை பிடிக்கப்பட்டார், மீண்டும் போராடித் தப்பினார்.
போருக்குப் பிறகு, யூதர்கள் தங்கள் யூத அடையாளத்தை மீண்டும் தொடங்கினர், ஆனால் அது யூத அனுசரிப்பிலோ அல்லது பாரம்பரியத்திலோ வேரூன்றாத ஒரு மெல்லிய அடையாளமாக இருந்தது, பரப்ப முடியாத ஒரு வெட்டப்பட்ட பூவைப் போல. கேத்தரின் தனது 11 வயதில் அம்மா இறந்துவிட்டதால், கேத்தரின் தன் யூத எதிர்ப்பு தந்தையிடம் வளர்ந்து வந்தார். “யூத சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற உணர்வு அவளிடம் இல்லை. அவளும் மிகவும் மதச்சார்பற்றவளாக வளர்க் கப்பட்டாள்.  அங்கு தான் வழக்கமான பிரெஞ்சு வளர்ப்பைப் பெற்றாள் ஆனால் அதே நேரத்தில் தனது அடையாளத்தின் இந்த பகுதி ஒருபோதும் ஆராயப்படாமலும் வளர்க்கப்படாமலும் இருந் தது என சிந்தித்தாள் தனது மூல இனத்தை தேடி னாள் யூத அடையாளங்களை ஆராய்ந்தாள். யூத மத பற்றோடு மனதை மாற்றிக் கொண்டு வந்தாள். அவரது தாயார் இறந்த சிறிது காலத்திலேயே, கேத்தரின் தந்தை ஒரு கிறிஸ்தவ பெண்ணை மீண்டும் மணந்தார். கேத்தரின் ஒரு உயர்நிலை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். உயர் நிலைப் பள்ளி பட்டம் பெற்ற பிறகு, அவர் பல்கலைக்கழகத்திற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார்.
இங்குதான் அவள் சுதந்திரமாக யூத மத ஆதரவாளர்களோடு நெருங்கியது மட்டுமல்ல மொசாத்தின் வலைக்குள் வீழ்த்தப்பட்டார்.மொசாத்தின் ஹனிட்ரிப் உளவு வேலை களுக்கு பயிற்சி தரப்பட்டு முழுமையாக தன்னை உளவாளியாக மாற்றிக் கொண்டாள்.இந்த யூத இனத்திற்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியோடு மொசாத்தின் திட்டங்களுக்கு தன்னை தியாகப்படுத்த தொடங் கினார்.அவளுக்கு 18 வயது. ஈரானுக்குள் நுழைய வேண்டும் அதுதான் கேத்தரினுக்கு வழங்கப்பட்ட பணி ஈரானுக்குள் ஒரு அந்நிய பெண் நுழைவது சாத்தியமா? அதை சாத்தியமாக்கினார் கேத்தரின் அதற்கு துவக்கமாக  ஐக்கிய ராஜ்ஜியத்தில் அவள் ஏமனைச் சேர்ந்த ஒரு அழகான முஸ்லிம் மனிதரைச் சந்தித்தாள், அவருக்கு வணிகம் வருமானம் – ஒரு நிலையான குடும்பம் மற்றும் வலுவான மத அடையாளம் – கொண்டிருந்தார்.அவரோடு பழக ஆரம்பித்தாள் தனது வசீகர அழகில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொள்ளும் நிலை வரை சென்றடைந்தார்.
அவரது கணவர் தனது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்று அவளிடம் கூறினார்.
“எனக்கு அது ஆட்சேபனை இல்லை,” என்று கேத்தரின் கூறினார். கேத்தரின் குர்ஆனைப் படித்துவிட்டு சன்னி முஸ்லிமான தனது கணவனின் கொள்கைக்கு எதிர்மாறான சூஃபி மாயவாதத்தில் ஆர்வம் காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவள் தனது கணவர் பக்தியுடன் கடைப்பிடித்த சுன்னி இஸ்லாத்தை கிட்டத்தட்ட  நிராகரித்தாள்.
அது அவளுடைய நோக்கமும் அல்ல.
தொடரும்…