ஈராக்கில் ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஓக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் மளமளவென்று தீ பரவியதால், அங்கிருந்த நோயாளிகள் வெளியேற முடியமால் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விபத்து தொடர்பாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதீமி விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



