இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

287 Views

தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.IMG 5064 இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

Leave a Reply