இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை வழங்கியிருக்க வேண்டும் – ஈரான் உயர் தலைவர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் துணை இராணுவப்படையின் தன்னார்வப் பிரிவான பாசிஸ் அமைப்பின் உறுப்பினர்களுடன்  நேற்று (25) கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் தெரிவித்துள்ளாவது,

காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேல்   போர்க்குற்றம் செய்துள்ளது. தற்போது அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளது, இது போதாது. நெதன்யாகு மற்றும் இந்த ஆட்சியின்  தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று காமேனி தெரிவித்துள்ளார்.