Home உலகச் செய்திகள் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது

காசா வின் வான் பகுதியில் அத்துமீறி நுழைந்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் நூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

ஹமாஸ் இயக்கத்தினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது இஸ்ரேல். இந்த நெருக்கடியான தருணத்தில் அரசியல் சம நிலையை உறுதி படுத்தும் பொருட்டு ஹமாஸ் இஸ்ரேல் மீதான தனது ஆக்ரோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
நேற்று இரவில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட இராக்கெட்டுகள் காசா பகுதியிலிருந்து வீசப் பட்டுள்ளது.

WhatsApp Image 2021 05 14 at 1.57.01 PM இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது

அதிர்ந்து போன இஸ்ரேல்!

நேற்று ஹாமாஸ் இயக்கததின் தாக்குதலில் இஸ்ரேலின் பலம் பொருந்திய Air defense system ஆன iron drome அழிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக மிக அதிக விலை மதிப்பு கொண்டது . இந்திய மதிப்பில் சுமார் 370 கோடி என மதிப்பிடப்படுகிறது.

இஸ்ரேல் விமானப்படையைச் சேர்ந்த F35 விமானங்கள் காசாவின் மீதான தாக்குதலை தீவிரப் படுத்தி யுள்ள அதே வேளையில் ஹமாஸ் இயக்கமும் தாக்குதலைத் தீவிரப் படுத்தியுள்ளது.

இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Exit mobile version