இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்,இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்

காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேலும், டைம்ஸ் இதழ் அட்டைப் படத்தில் கிரெட்டா துன்பெர்க் இடம்பெற்றுள்ள அட்டைப் படத்தை ‘இளைஞர்களின் சக்தி’ என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

“இங்கு பருவநிலை கடுமையாகப் பாதிப்படைந்துவிட்டது. பூமியில் நாம் வெளிவிட்ட கரிம வாயுவினால் பூமியைப் பாதுகாத்து வந்த ஓசோன் படலம் கிழிந்து தொங்குகிறது. ஊடகங்களும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறிவிட்டன. இது பற்றி எந்தக் கவலையும்படாமல் உலகத் தலைவர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பது பற்றி மட்டும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

என் எதிர்காலக் கனவுகளை, குழந்தைத் தன்மையை உங்கள் வெற்று வார்த்தைகளால் திருடிவிட்டீர்கள். நாங்கள் சாகத் தொடங்கியுள்ளோம். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்” என்று ஆவேசமாக ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் 16 வயதான கிரெட்டா ஆற்றிய உரைதான் இன்று அவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படக் காரணம்.

அதுமட்டுமில்லாது வெள்ளிக்கிழமைதோறும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்குக் கொண்டு வருகிறார் கிரெட்டா.109084229 gettyimages 1129360656 இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்,இந்த ஆண்டிற்கான சிறந்த நபர்

Leave a Reply