கிளிநொச்சி பிராந்திய ஊடகவியலாளர் நிபோஜன், தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்ற இரயில் விபத்தில் காலமானார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெஹிவளைப் பகுதியில் இரயில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நிட்சிங்கம் நிபோஜன் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்து தவறி வீழ்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
காலியில் நடைபெற்ற ஊடகச் செயலமர்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.