Tamil News
Home செய்திகள் இலங்கை வரலாற்றில் முக்கிய தலைவர்கள் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தல்

இலங்கை வரலாற்றில் முக்கிய தலைவர்கள் போட்டியிடாத ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தல் களத்தில் களமிறங்கா விட்டால், இலங்கையின் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் போட்டியிடாத முதலாவது தேர்தலாக இது அமையும் என்பது விசேட அம்சமாகும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இம்முறை தேர்தலில் அவர் களமிறங்கா விட்டால், இலங்கை வரலாற்றில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் விசேடமானதாக இருக்கும்.

காரணம் இதுவரையில் இடம்பெற்றுள்ள தேர்தல்களில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் என யாரேனும் ஒருவர் களமிறங்கியுள்ளனர். இவர்களே நாட்டின் பிரதான அரசியல் தலைவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

இவ்வாறு பிரதான தலைவர்கள் களமிறங்காத முதலாவது தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தால், அதுவே விசேட அம்சமாகும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version