Tamil News
Home செய்திகள் இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ள கப்பல் தீ விபத்து

இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ள கப்பல் தீ விபத்து

சிங்கப்பூரில் பதியப்பட்ட MV X-Press Pearl சரக்குக் கப்பல் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி பல நாட்களாக எரிந்த நிலையில், இவ்விபத்து இலங்கையின் கடற்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவு எனக் கூறப்படுகின்றது.

இக்கப்பல் தீ விபத்தால் ஏற்பட்டுள்ள மாசுபாட்டினை சுத்தம் செய்ய கப்பல் நிறுவனத்திடம் 17 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியிருக்கிறது.

இரசாயனங்கள், அமிலங்கள், எண்ணெய் பொருட்களை கொண்டிருந்த இக்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து, 10 நாட்களுக்குப் பிறகு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், இவ்விபத்து ஏற்படுத்திய மாசுபாட்டினால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version