இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரஸ்வாமி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவர் பதவியில் இருந்து விலகிவிடுவாரெனவும் மத்திய வங்கியின் தகவல்கள் கூறுகின்றன.
சிறீலங்காவின் அரச தலைவராக காேத்தபாயா பதவியேற்ற பின்னர் பல அதிகாரிகள் பதவி விலகி வருவதுடன் சிலர் நாட்டை விட்டும் தப்பியாேடி வருகின்றனர்.