Tamil News
Home செய்திகள் இலங்கை பயணிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் முக்கிய அறிவித்தல்

இலங்கை பயணிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் முக்கிய அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிந்துள்ளது.

இதன் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், குறுகிய கால விசாக்களையுடையவர்கள், அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளுக்காக, அரசாங்க தனிமைப்படுத்தல் வசதிகளுக்கான விசேடமான மீள அழைத்து வரும் விமானங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து இலங்கை அரசாங்கம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம்) ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

1-கோவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அங்கீகாரம் / ஆலோசனையின் அடிப்படையில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விமானமொன்றில் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலொன்றில் கட்டணம் செலுத்திய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான இணக்கப்பாட்டின் அடிப்படையில், இலங்கையர்கள் அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் (இரட்டைக் குடியுரிமையுடையவர்கள்) இலங்கைக்கு எந்தவொரு வணிக / மீளழைத்து வராத விமானங்களிலும் வெளியுறவுச் செயலாளர் (அல்லது) சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

  1. மேற்கண்ட ஏற்பாட்டின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பயணிகள் கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தலை கட்டாயமகாக் கடைபிடிப்பதனை உறுதி செய்வது சம்பந்தப்பட்ட விமானத்தின் முழுமையான பொறுப்பாகும்.

புதிய வழிகாட்டுதல்களுக்கு அமைவான மேலதிக மதிப்பீடுகளின் அடிப்படையில், விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் மேலாய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version