ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் நான்கு வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ததன் மூலம் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா (சுயேட்சை வேட்பாளர்) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க, அரியநேத்திரன் உள்ளிட்ட40 பேர் இம்முறை இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.