இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை- கமால் குணரட்ண

167 Views

இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண பொதுமக்கள் அமைதியாகயிருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என பொய்ப்பிரச்சாரம் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சும் முப்படையினரும் சட்டஅமுலாக்கல் தரப்பினரும் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையை அடிப்படையாக வைத்து இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என தகவல்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply