Tamil News
Home செய்திகள் இலங்கை உள்ளிட்ட ஐந்து  நாடுகளுக்கு பஹ்ரைன் பயணத் தடை

இலங்கை உள்ளிட்ட ஐந்து  நாடுகளுக்கு பஹ்ரைன் பயணத் தடை

இலங்கை உள்ளிட்ட ஐந்து  நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதன்படி, இலங்கை,இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் நுழைவை பஹ்ரைன் மே24 முதல் நிறுத்தி வைத்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் ( BNA ) தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த இடை  நிறுத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்பதுடன் பஹ்ரைன் வந்தடைந்ததும் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்றும் பி.என்.ஏ. கூறியுள்ளது.

இந்த முடிவு அரசாங்க செயற்குழு உத்தரவுகளுக்கு இணங்கவும், சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களான கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

Exit mobile version