Tamil News
Home செய்திகள் இலங்கை– இன்னும் சர்ச்சைக்குரிய பல இராணுவப் பதவி உயர்வுகள்- ITJP அறிக்கை

இலங்கை– இன்னும் சர்ச்சைக்குரிய பல இராணுவப் பதவி உயர்வுகள்- ITJP அறிக்கை

2009 ஆம் ஆண்டு தடுப்புகாவலில் இருந்த ஒரு தமிழ் வைத்தியருக்கு மருத்துவ
சிகிச்சை வழங்க மறுத்ததன் மூலம் அவரை பொய்யான வாக்குமூலத்தை வழங்குமாறுநிர்ப்பந்தித்து அச்சுறுத்தியதாக சொல்லப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரானறுவான் சுரேஸ் சாலேயிற்கு மேஜர் ஜெனரலாக இலங்கையின் ஜனாதிபதி பதவி உயர்வுவழங்கியுள்ளார்.

வைத்தியர் துரைராஜா வரதராஜா ஒரு அரசாங்க வைத்தியராக இருந்ததுடன்
அவர் 2009 இல் போர் வலயத்தில் பணிபுரிந்தது போரின் முடிவின் பின்னர் கிட்டத்தட்ட 100நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார். இவ்வாறு வழக்கு எதுவும் தொடராமல் நீண்ட நாட்கள் தடுத்துவைத்திருத்தல் சித்திரவதைக்கு எதிரான தீர்மானத்தை மீறும் கொடுமையான, மனிதாபிமானமற்ற நடத்துமுறை அல்லது தண்டனை ஆகும்.“வழக்கு எதுவும் தொடராமல் நீண்ட நாட்களாக தடுத்து வைத்தல் ,உளவிலயல் ரீதியிலான சித்திரவதை மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் செய்தல் போன்றவகைகளில் நடத்துதல் சித்திரவதைக்கு எதிரான தீர்மானத்தை மீறும் செயலாகும்.

இந்த தீர்மானத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடாக இலங்கை இருகின்றது அத்துடன் அதற்கு உலகளாவிய சட்ட வரம்பின் கீழ் உட்பட கட்டளைப் பொறுப்பில் இருப்பவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட முடியும் ” என ITJP
இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். “ வைத்தியர் வரதராஜா மிகவும் துணிச்சலானமுன்னாள் அரசாங்க வைத்தியப் பணியாளர் அத்துடன் அவரது மருத்துவ அணியானது தமக்கே பாரிய ஆபத்து இருந்தவேளையிலும் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்கள்.

அவர் அடைத்து வைக்கப்படுவதற்குப் பதிலாக ஒரு பதக்கம் வழங்கப்படும் அளவுக்கு
தகுதியுடையவராக இருந்தார் ”.தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவிற்கு தப்பிச் சென்று தற்போது கோவிட் 19 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிவரும் வைத்தியர் வரதராஜா, இராணுவப் புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சாலேயே தனது சித்திரவதைகளுக்குப் பொறுப்பானவர் எனவும் போரின் போது பொதுமக்களின்
இழப்பின் அளவினை மறுப்பதற்காக அவரையும் ஏனைய வைத்தியர்களையும் பலவந்தப்படுத்தி கொழும்பில் அரங்கேற்றப்பட்ட செய்தியாளர்கள் மாநாட்டிற்கு போலியான வாக்குமூலத்தை வழங்குவதற்கு தன்னை வற்புறுத்தி தயார் செய்தார் எனவும் சுரேஸ் சாலையை அடையாளங் காட்டியுள்ளார்.

“கேணல் சுரேஸ் எங்கள் அனைவரையும் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப் போவதாக அச்சுறுத்தினார்…… எங்களது குடும்பங்களும் அச்சுறுத்தப்பட்டன” என வைத்தியர் தெரிவித்தார்,அந்த நேரத்தில் அதிகாரம் மிக்க பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அவர்களின் கட்டளைகளுக்கு அமையவே தான் செயற்படுவதாக சுரேஸ் தெளிவுபடுத்தியதாக அவர் கூறுகின்றார்.
அச்சுறுத்தல்களை விட ,போரில் கடுமையான காயம் ஏற்பட்ட தனது கையிற்கு அவசியமானசத்திர சிகிச்சை தனக்கு தேவைப்பட்டது என்பதை ஒரு பிடியாக பாவித்த சுரேஸ் தனதுவிருப்பத்திற்கு எதிராக செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு நிர்ப்பந்தித்தார் என வைத்தியர் வரதராஜா குற்றஞ்சாட்டுகின்றார்.

சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு வைத்தியரை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் அவரது கையில் வலி , உணர்வு தொடர்பான பிரச்சினைகள்,
ஒரு சத்திர சிகிச்சை நிபுணருக்கு தேவையான இயக்க அசைவு இழப்பு போன்ற நிரந்தரமான மேலதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக போர்வலயத்தில் தங்கியிருந்த இந்தவைத்தியர்கள் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் என்ற ஊடக கண்காணிப்பகத்தால் அந்த நேரத்தில் போரின் போது உலக செய்தி ஊடகங்களுக்கு முக்கிய தகவல்களை வழங்கி அத்தியாவசியப் பணியை மேற்கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு பணியாற்றியமை போர் முடிவடைந்த போது அவர்கள் இலக்கு வைக்கப்பட வழிசெய்தது. 08 யூலை 2009 இல் வரதராஜா உட்பட்ட அந்த வைத்தியர்கள் செய்தியாளர் மாநாட்டில் பொய் கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் அத்துடன் அதன் பின்னர் அவர்கள் தாம் அடைத்து வைக்கப்பட்ட அறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அவர்களை கையாண்டவர்களால் கென்ரேக்கி பொரித்த கோழி உணவகத்திற்கு சாப்பிடுவதற்கு வழமைக்குமாறாக கொண்டு செல்லப்பட்டு விநோதமான முறையில் பரிசளிக்கப்பட்டார்கள்.

அந்த வைத்தியர்களின் “வாக்குமூலங்களின்” உண்மைத் தன்மைகுறித்து அநேகமான சர்வதேசஅவதானிப்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக அந்த நேரத்தில் அமெரிக்காவின் கசியவிடப்பட்ட தொலைப் பதிவுகள் தெரிவித்தன. செய்தியாளர் மாநாடு வைக்குமாறு இந்த வைத்தியர்கள் அழுத்தங்கொடுக்கப்பட்டதுடன் “அந்த செய்தியாளர் மாநாட்டுக்காக குறிப்பிட்ட வசனங்களைக் கூறுமாறு அவர்கள் கடினமாக பயிற்றுவிக்கப்பட்டதுடன் செய்தியாளர் மாநாட்டுக்கு முன்னதாக பல
ஊடகவியலாளர்களுக்கு முன்பாக கூட பயிற்சி வழங்கப்பட்டதாக” தூதரக அதிகாரி ஒருவருக்குஅந்த வைத்தியர்கள் கூறியிருந்ததாக விக்கிலீக்கினால் வெளியிடப்பட்ட ஒரு தொலைப்பதிவு தெரிவித்தது.

இதைவிட “தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் பாதுகாப்பு செயலாளர்
பார்க்க வந்ததுடன் பலமுறை விசாரணையும் மேற்கொண்டார் ” என அந்த வைத்தியர்கள்தெரிவித்ததாக அந்த தொலைப் பதிவு அறிவித்துள்ளது.
இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என அரசாங்கம் பின்னர் ஒத்துக் கொண்டிருந்தாலும் போரின் இறுதி ஐந்து மாதங்களில் 650 வரையானவர்களே இறந்ததாக அந்த செய்தியாளர் மாநாட்டில் சொல்லுமாறு அபத்தமான முறையில் அந்த வைத்தியர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.

உண்மையில் இறந்த உடல்களை புகைப்படங்களில் மட்டும் எண்ணும் போதே சாதாரணமாக அந்த எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கும் , ஒரு புறம் இது ஐ.நாவினால் மிகக் கவனமான முறையில் சரிபார்த்து கணக்கெடுக்கப்பட்ட ஏப்பிரல் 2009 வரையான இழப்பு மதிப்பீடுகளை விடவே மிகக் குறைவாக உள்ளது.

அதேவேளையில் இலங்கை அரசாங்கமானது “போரின் இறுதி வாரங்கள் மற்றும் போரின் இறுதிநாட்களின் போது பொதுமக்களின் துன்பங்கள் மற்றும் இறப்புக்களின் அளவினைக் குறைத்துக் கூறும்முயற்சிகளையே அது தொடர்ந்து கொண்டு இருப்பது” போல் தெரிவதாக அந்த நேரத்தில்அமெரிக்காவின் இராஜதந்திர தொலைப்பதிவுகள் தெரிவித்தன.

இந்த வைத்தியர்கள் இறுதியாக விடுதலை செய்யப்பட்ட போது அவர்கள் கடத்தப்படும் அல்லது நீதிக்குப்புறம்பான முறையில் கொல்லப்படும் அபாயத்தில் அவர்கள் இருந்ததாக இராஜதந்திரிகள் அந்த நேரத்தில்
கவலையடைந்திருந்தனர்.

இதைத் தவிர,சுரேஸ் சாலே,2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைக்கு 2016 ஆம் ஆண்டுநீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டார். 2016 இல் சாலேயினுடைய முக்கிய உதவியாளர் அடையாள அணிவகுப்பின் போது லசந்த வழக்கில் சந்தேகநபராக அடையாளங்காணப்பட்ட அதேவேளையில் இரண்டாவது சந்தேகநபரான கந்தகெதர பியவன்ச என்பவர் சாலேயினுடைய
தனிப்பட்ட உத்தியோகத்தராக9 இருந்தார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசாரால்கண்டுபிடிக்கப்பட்ட கேலிச்சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னலிகொட காணாமற்போனமை தொடர்பில் 2010 இல் அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் இருந்துநீக்கப்பட்ட அரச வழக்கறிஞரைக் கொண்டு பிணை பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர்களுக்கு உதவுவதற்கு சுரேஸ் சாலே முயற்சி செய்திருந்ததாக இலங்கை ஊடகங்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருந்தன. இலங்கை காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவு தமது
விசாரணைகளுக்கு சுரேஸ் சாலே ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டியது.இதன்விளைவாக சிவில் சமூக அமைப்புக்கள் அவர் இராணுவப் புலனாய்வு பணிப்பாளர் பதவியில்இருந்து மாற்றப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டதாக அந்த நேரத்தில் அறிக்கைகள் தெரிவித்தன.

கடந்த வாரம், பிரசன்ன டி அல்விஸ் இனை குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக இலங்கை ஜனாதிபதி நியமித்தார். இவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின்இன்றுமொரு நெருங்கிய நண்பராக இருப்பதுடன் சித்திரவதையில்  சம்பந்தப்பட்டவர் எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றார்.

சுரேஸ் சாலேயின் பணியாளரான கந்தகெதர பியவன்ச 2016 ஆம் ஆண்டு
ஒரு திறந்த நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் பத்திரிகையாளர் கொலையில் முன்னாள்இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை சிக்கவைப்பதற்காக தன்னை அரச சாட்சியாளர்ஆக்குவதாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் உறுதிகூறி அல்விஸ் தன்மீது செல்வாக்குச் செலுத்தமுயற்சி செய்ததாக கூறிய பின்னர் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அல்விசும் விசாரணை செய்யப்பட்டார்.

“பாதுகாப்பு சேவைகளில் ஒருவரை ஒருவர் பாதுகாப்பதில் பல வருடங்களைக் கழித்த
குற்றவாளிகள் எனச் சொல்லப்படுபவர்களைக் கொண்ட ஒரு சிக்கலான வலையமைப்பானது இப்போது ஜனாதிபதியால் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுவருவதை நாம் பார்க்கின்றோம். எந்த வித அமைப்புசார் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுக்கே இடமில்லாதவகையில் தண்டணையில் இருந்து பாதுகாப்பு என்பது தற்போது நன்றாக வேரூன்றியுள்ளது. ” என
சூக்கா தெரிவித்தார்.

 

 

Exit mobile version