அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிஃப் 5’ (Mein Schiff 5)இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், புதன்கிழமை (30) அம்பாந்தோட்டை நோக்கிச் செல்லவுள்ளது.
இந்த கப்பல் 2014 பயணிகள் மற்றும் 922 பணியாளர்களை ஏற்றி வந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.
‘மெயின் ஷிஃப் 5’ கப்பலானது ஜேர்மன் ஆபரேட்டர் TUI க்ரூஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.
கடந்த 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் 295 மீட்டர் நீளமுடையது.
இதேபோன்ற நான்கு சொகுசு கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிர்மல் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.