Tamil News
Home செய்திகள் இலங்கையை சீனா ஆக்கிரமித்தது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும் பௌத்த தேரர்

இலங்கையை சீனா ஆக்கிரமித்தது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும் பௌத்த தேரர்

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போதும் சரி, யுத்தத்தின் பின்னரும் சரி சீனா பொருளாதார ரீதியில் இலங்கைக்கு உதவி வந்துள்ளது. போரிற்குப் பின் நாடு பேரெழுச்சியாக முன்னேறுவதாக மக்கள் காண்கின்றார்கள். இவை அகைத்தும் கடனாக எடுக்கப்படட பணத்தில் செய்யப்படும் அபிவிருத்திகள் என்பதை மக்கள் அறியாதிருக்கின்றார்கள். இப்போது கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வருகின்றது.

முதலாவது கடன் தொகையை இலங்கை செலுத்த வேண்டிய காலம் வந்த போது, இலங்கையால் அதை செலுத்த முடியவில்லை.

முதலாவதாக இலங்கையால் கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது தலைநகரில் 1000 ஏக்கர் காணியை எமக்குத் தாருங்கள் என சீனா கேட்கின்றது. அதை முதலில் கொடுக்கின்றார்கள்.

இரண்டாவது முறையும் பெற்ற கடன்களை அடைக்க வேண்டிய காலம் வருகின்றது. செய்தவை அனைத்தும் நட்டத்தில் உள்ளது. எனவே உங்களுக்கு இன்னொரு சலுகை வேண்டுமானால் இன்னும் 1000 ஏக்கர் காணி வேண்டும் என சீனா வாங்கிக் கொள்கின்றது. இப்போது 2000 ஏக்கர் காணியை அன்றைய மகிந்த அரசு கொடுக்கின்றது.

நாடு முன்னேறுவதாக மக்கள் நினைத்துக் கொண்டு மகிழ்கின்றார்கள். ஆனால் நாடு விலை போய்க் கொண்டிருப்பதை அவர்கள் அறியாமல் இருந்தார்கள்.

அத்தோடு இராஜதந்திர ரீதியாக இலங்கை சீன அரசிற்கு கட்டுப்பட வேண்டும் என ஒரு கோரிக்கையை இலங்கையிடம் சீனா வைத்திருக்கின்றது. அதையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்கின்றது.

அதன் பின் கடனை அடைக்கும் காலம் வருகின்றது. அதற்காக இராணுவ தலைமையகம் அமைந்திருந்த கோல்பேஸ் நிலத்தை பண்டாரநாயக்க சிலையோடு சீனா உரிமையாக வாங்கிக் கொண்டு அங்கே சங்கிரிலா விடுதியை அமைக்கின்றது.

அதற்கு அடுத்த கடன் தொகையை கொடுக்க வேண்டிய காலம் வருகின்றது. இலங்கையிடம் திருப்பிச் செலுத்த பணம் இல்லை. இப்போது இலங்கையிடம் சீனா இலங்கைக்குரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி கேட்கின்றது. அதையும் இலங்கை கொடுக்கின்றது.

இந்திய மற்றும் இலங்கை நதிகளில் இருந்து உருவாகும் மீன்கள் எமது பகுதியில் வாழ்கின்றன. அவற்றை சீனா அதிபலம் கொண்ட கப்பல்களில் வந்து பிடித்துக் கொண்டு போகின்றது. இப்போது கடலையும் அவர்களுக்கு கொடுத்து விட்டோம்.

அடுத்த தொகையாக போர்ட் சிற்றி என கடலில் உருவான 500 ஏக்கர் நகரில் 1/3 பகுதியை சீனாவிற்கு உரிமையாகக் கொடுக்கின்றார்கள். அதில் இன்னொரு பகுதியை சீனாவிற்கு லீசிற்கு கொடுக்கின்றார்கள்.

500 ஏக்கருக்கு குறைந்த நாடுகள் உலகில் உள்ளன. இத்தாலியில் உள்ள வத்திக்கான் போன்றவை அவை. இந்தப் பகுதி எதிர்காலத்தில் எப்படியான இராச்சியம் ஆகும் என நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அடுத்து திருகோணமலையில் போர் விமானங்களை உருவாக்க ஒரு பகுதியை தருமாறு சீனா கேட்கின்றது. உலகின் புவியீர்ப்பு குறைந்த பகுதியாக திருகோணமலை உள்ளது. எனவே தான் அதை பலர் கண்வைத்துள்ளனர். அதையும் இலங்கை அரசு கொடுத்தது. ஏவுகணைகளை இலகுவாக ஏவக்கூடிய இடம் அப்பகுதியாகும்.

துறைமுகத்தையும் கொடுத்து விட்டோம். இப்படி சீன ஆக்கிரமிப்பு தொடர்கின்றது.

 

Exit mobile version