Tamil News
Home செய்திகள் இலங்கையில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையில் 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர் – பேராதனை பல்கலைக்கழகம்

இலங்கையில் தற்போது 96 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்தனர் என்றும் ஆனால் அந்த தொகை தற்போது 96 இலட்சமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சமூகத்தில் வாழும் சுமார் 42 வீதமான மக்கள் தற்போது வறுமையில் வாடுவது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 26 வீதமான மக்கள் வறுமையில் வாடுவதாக அண்மையில் உலக வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது என்றும் ஆனால் இன்னும் பலர் உண்மையில் வறுமையில் வாழ்கிறார்கள் என்பது ஆய்வில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version