Home செய்திகள் இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – சில முக்கிய செய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா – சில முக்கிய செய்திகள்

மத்திய கலாசார நிதித்திட்டத்திற்கு கீழ் பராமரிக்கப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொலன்னறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி உள்ளிட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளது.

01 5 1 இலங்கையில் வேகமாக பரவும் கொரோனா - சில முக்கிய செய்திகள்
 

இந்நிலையில்,மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று வரை 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதே நேரம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 10 பேர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் 400 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 முகக்கவசம் ஒன்றை ஆகக் கூடியது 4 மணித்தியாலத்துக்கு மாத்திரமே அணிந்திருக்க வேண்டும் என்றும் அதன்பின்னர் புதிய முகக்கவசத்தை அணிவது அவசியமெனவும் சுகாதார மேம்பாடு அலுவலகத்தின் சமூக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

தொழில் நிமித்தம் வெளியில் செல்வோர் அல்லது வேறு தேவைகளுக்காக வெளியே செல்வோர் ஒரு முகக்கவசத்தை 4 மணித்தியாலமே பயன்படுத்த வேண்டும். எனவே, வெளியே செல்லும் போது, மேலதிகமாக 2 முகக்கவசங்களை கொண்டு செல்லுவது சிறந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசங்களை ஆங்காங்கே வீசி விடுவதாலும் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமிக் கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசோல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படும் பொதுமக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த தினங்களில் பொதுப் போக்குவரத்தில் உரிய முறை மையில் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகள் பின் பற்றப் படவில்லை என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version