இலங்கையில் நேற்று 1,914 பேருக்கு தொற்று – வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் 54 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. நேற்று 1,914 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் வெளி நாடுகளிலிருந்து திரும்பிய 54 பேரும் உள்ளடங்குவார்கள்.

இதன்படி நாட்டில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் கொரோனாத் தொற்றாளர் களின் எண்ணிக்கை 1500 ஐ கடந்துள்ளது. கடந்த 6 நாள் களில் 10 ஆயிரத்துக்கும் அதிக மானவர்கள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.