இலங்கையில் களநிலமைகளை ஆய்வு செய்தார் அமெரிக்க செனட்டர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட்சபை உறுப்பினர் வன் கொலன் அங்கு படைத்துறை கட்டமைப்புக்கள், பொதுமக்களின் அமைப்புக்கள், மலையக தமிழ் மக்கள், இலங்கை அரச தலைவர், மூதலீட்டாளர்கள் உடப்ட பலரை சந்தித்து கலந்துரையடியுள்ளார்.

நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சுதந்திரமான செயற்பாடுகள் முக்கியம் என தெரிவித்துள்ள கொலன், அமெரிக்காவினால் இலங்கைக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கஜபாகு கடற்படை கப்பலையும் சென்று பார்வையிட்டுள்ளார்.

மலையகம் சென்று அங்கு மக்களை சந்தித்ததுடன், மலையக மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு அமெரிக்கா உறுதுணை வழங்கும் என தெரிவித்துள்ளதுடன், கண்டி சென்று இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்காவையும் சந்தித்துள்ளார்.

இன மற்றும் மத சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என கொழும்பில் சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர், அனைத்துலக காணாமல்போனோர் தினத்தில் இலங்கையில் காணாமல்போன மக்களின் உறவினர்களின் துன்பங்களில் அமெரிக்கா பங்கெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தவேண்டும் என்றால் அங்கு நீதி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.