இலங்கையில் இன்னுமொரு தாக்குதலா? சதி பற்றி இராணுவம் கூறுவதென்ன?

215 Views

ஈஸ்டர் தாக்குதலைப் போன்றதொரு தாக்குதலை நடத்த இராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான போலிச் செய்திகளால் சிறிலங்கா இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், போலிச் செய்திகளால் நாட்டு மக்களின் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான போலி தகவல்களை வெளியிட்ட நபர்கள் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இணையத்தளத்தின் ஊடாகவும்,  இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடாகவும் சிறிலங்கா இராணுவம் தொடர்பான போலிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply