இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா: நோர்வேயிடம் எதிர்க் கட்சித் தலைவர் உதவி கோரல்

இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்று நோயை சமாளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நோர்வேயிடம் உதவி கோரியுள்ளார்.

இலங்கையில் உள்ள நோர்வே துாதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பான கலந்துரையாடலில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

இலங்கைக்கு அவசர சிகிச்சை படுக்கைகள், ஓக்ஸிஜன், உயிர் காக்கும் உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை எனவும் சஜித் பிரேமதாச நோர்வே துாதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு அமைய  வெளிநாட்டு பங்காளர்களிடம் இருந்து இலங்கைக்குத் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளுவதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த தாழ்மையான கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.