இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்த நிலையில் இருப்பதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட பிற்ஸ் எனப்படும் நிதி தரப்படுத்தும் அமைப்பு நேற்று (8) தெரிவித்துள்ளது.
எனவே இலங்கையின் தரம் மட்டுப்படுத்தப்பட்ட வீழ்ச்சி நிலையில் தொடர்ந்து இருக்கும் என அது தெரிவித்துள்ளது. இலங்கையின் அன்னியக் கையிருப்பு கடந்த மாதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக இலங்கை மத்தியவங்கி அறிக்கை வெளியிட்ட நிலையில் பிற்ஸ் அமைப்பின் அறிக்கை வெளிவந்துள்ளது. 2014 மற்றும் 2019 காலப்பகுதியில் 7.3 பில்லியன் டொலர்களாக இருந்த கையிருப்பு தற்போது 3.8 பில்லியனாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனிடையே, பல நாடுகள் தமது அன்னியக் கையிருப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்ட போதும் பெரும்பாலான நாடுகளின் கையிருப்புக்கள் மிகவும் பின்னதங்கிய நிலையிலேயே இருப்பதாக அது மேலம் தெரிவித்துள்ளது.