Tamil News
Home செய்திகள் இலங்கையின் வறுமை கோடு 25 வீதமாக அதிகரிக்கும்-உலக வங்கி

இலங்கையின் வறுமை கோடு 25 வீதமாக அதிகரிக்கும்-உலக வங்கி

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, வறுமை விகிதத்தை 13.1 வீதத்தில் இருந்து 25 வீதமாக இரட்டிப்பாக்கியுள்ளதாக உலக வங்கி கணித்துள்ளது.

அத்துடன் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல அபாயங்கள் காரணமாக அடுத்த சில வருடங்களில் அது 25 வீதத்திற்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியானது வறுமைக் குறைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

இதன்படி நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.3 சதவிகிதம் சுருங்குகிறது, எனவே நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள், நிதி ஒருங்கிணைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது.

அதுவே வலுவான மற்றும் நெகிழ்வான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version