Tamil News
Home செய்திகள் இலங்கையின்  மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய   ஜெனீவாவில்  புதிய செயலக  அமைப்பு

இலங்கையின்  மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய   ஜெனீவாவில்  புதிய செயலக  அமைப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமை பேரவை ஜெனீவாவில் செயலகமொன்றை அமைத்துள்ளது.

இது குறித்து மனித உரிமை பேரவையின் செயலாளர் Goro Onojima , “உறுப்புநாடுகளிற்கு வழங்கியுள்ள சுற்றுநிரூபத்தில் 13 உறுப்பினர்களை கொண்ட செயலகம் குறித்தும் அதற்கு வருடாந்தம் அமெரிக்க டொலர் தேவைப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செயலகம், விசாரணையாளர்கள் சட்டத்தரணிகளை கொண்டிருக்கும். மேலும்  உலகளாவிய நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை சேகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,  இந்த செயலகம்  அமைக்கப்படுவதன் மூலம், இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட படைத்தரப்பினர் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் வெளிநாட்டு நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும்  இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுக்களுடக் தொடர்புபட்ட அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் கைதுசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version