இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையின் சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போசாக்கின்மை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.

குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரட்ண இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.