இலங்கைத் தீவில் தமிழரின் எதிர்பார்ப்பு, அரசியல் தீர்வே – சபா குகதாஸ்

223 Views

இலங்கைத் தீவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையைத் தமிழர் தரப்பு தமக்குச் சாதகமாகக் கையாள உறுதியான நிலைப்பாட்டைத் தயார்ப்படுத்தி, இராசதந்திரக் காய் நகர்த்தல்களை மேற் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் “1948 ஆண்டில் இருந்து 2019 வரை ஆட்சியில் ஆட்களை மாற்றியதை தவிர ஆட்சியின் நிகழ்ச்சி நிரலை மாற்ற முடியவில்லை என்பது தமிழர்களுக்கு பாரிய ஏமாற்றமாகும்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளரின் வெளிநாட்டுக் கொள்கை கடந்தகால ஆட்சியாளர்களின் நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதால்,  இந்திய மேற்குலக நாடுகளின் தொடர் அழுத்தங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

தற்போதைய கோட்டாபய ஆட்சி 2025 வரை தொடரும் போது ஏற்பட இருக்கும் சர்வதேச பூகோள இராசதந்திர நகர்வுகளின் ஊடாக தமிழர் தரப்பு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு களம் இறங்க வேண்டும். ஆகவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் அல்ல தங்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வே.” என்றார்

Leave a Reply