இலங்கையின் இறைமை மீதான முறி தொடர்பில் அமெரிக்காவை தயமாகக் கொண்ட Hamilton Reserve Bank என்ற வங்கியிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்த தவறியதால் இலங்கை மீது நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வங்கி வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு இலங்கை அரசின் வெளிநாட்டு கடன்பெறும் தகுதியை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பதற்கு இலங்கை அரசு முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை.
இலங்கை அரசு மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு திட்டங்களிலும் அமெரிக்க வங்கி கலந்துகொள்வதற்கு மறுத்துவிட்டது. இலங்கையின் ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான முறிகளில் அமெரிக்க வங்கி 250 மில்லியன் டொலர்களை கொண்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அரசு நீதி மன்ற தீர்ப்பில் தலையிட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு அமெரிக்க அரசு சார்பில் அனுப்பிய கடிதத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முயற்சி என்பது தற்போதைய இலங்கை அரசு தொடர்பில் அமெரிக்கா அதிக அக்கறைகள் காண்பித்துவருவதை காட:டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.