இருபாலையில் நேற்று மாலை வாள்வெட்டு ; இருவர் படுகாயம்! ஒருவர் கைது

இருபாலை மடத்தடிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மடத்தடிப் பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த மரணச் சடங்கில் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது வாள்வெட்டுச் சம்பவமாக மாறியுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.