இன்று கருப்பு தினம் அனுசரிப்பு: டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம்

205 Views

இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகின்றன. அதே சமயத்தில், இந்தியாவின் பிரதமராக பதவியேற்று ஏழாண்டு காலத்தை நரேந்திர மோதி நிறைவு செய்கிறார்.

இந்த நிலையில், இன்றைய நாளை “கருப்பு தினமாக” அனுசரிக்க போவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, இந்திய தலைநகர் டெல்லியை ஒட்டி உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசியாபாத் பகுதியில் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply