இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா

204 Views

உலக சுற்றுச்சூழல் தினம், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா தெரிவித்த கருத்தில், சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது.  எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது” என்பதை நிறுவியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply