இந்தோனேசியாவில் புயல் – 100க்கும் மேற்பட்டோர் பலி

298 Views

இந்தோனேசியாவில் செரோஜா புயல் பாதிப்புகளால் 177 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவை  செரோஜா  என்ற புயல் கடுமையாகத் தாக்கி வருகிறது.  கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில் புயல் காரணமாக கடற் சீற்றத்துடன் காணப்படுவதாகவும்   கிழக்கு புளோரெஸ் மாவட்டத்தில் மட்டும் 72 பேர்  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலால்  45 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.    அத்தோடு புயலால் பாறைகள் சரிந்து நிலப்பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் பல கிராமங்கள் தனித்து விடப்பட்டு உள்ளதாகவும்  பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் நடவடிக்கையில் அரசு ஈபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply