இந்திய வகை கொரோனா பரவல்: தாய்லாந்தில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்

மலேசியா மற்றும் மியான்மரிலிருந்து நிகழும் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் செயல்களால் இந்திய வகை, தென் ஆப்பிரிக்க வகை கொரோனா உள்ளிட்ட கொரோனா கிருமித்தொற்று பரவக்கூடும் என்பதால் தாய்லாந்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் மூலம், முறையான அனுமதியின்றி மலேசியாவிலிருந்து வேலைத் தேடி வந்த 10 மியான்மரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மியான்மரிலிருந்து தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 49 மியான்மரிகளும் 3 வழிக்காட்டிகளும் தாய்லாந்தின் Lat Ya மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.