இந்திய – பாகிஸ்தான் இடையில் ஆளில்லாத தாக்குதல் விமான மோதல்கள்

குண்டுகளை சுமந்து செல்லும் ஆளில்லாத தாக்குதல் விமானங்களின் தாக்குதல்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளதால் இரு நாடுக ளிலும் பெருமளவான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது டன், மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை(8) இந்தியாவினால் ஏவப்பட்ட 25 ஆளில்லாத தாக்குதல் விமானங் களை தாம் சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயம டைந்துள்ளனர். ஆனால் தாம் பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்தி
யதாக இந்தியா பின்னர் தெரி வித்திருந்தது.
அதேசயம் இந்தியாவின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள காஸ்மீர் பகுதி மீதும் பாகிஸ்தான் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்கு தலினால் வியாழக்கிழமை இரவு அங்கு மின்சாரமும் முற்றாக தடைப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்களை கடந்த செவ்வாய்க்கிழமை(6) மேற்கொண்ட பின்னரே இரு நாடுகளுக்கு இடையில் தாக்குதல்கள் மேலும் விரிவுபெற்று வருகின்றன. இந்த தாக்குதலின் போது இந்தியாவின் 5 விமானங்களை பாக்கிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்தபோதும், இந்தியா அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவின் தாக்குதல்களில் பாகிஸ்தா னில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், 48 பேர் காயமடைந்துள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ள அதேசமயம், காஸ்மீரின் எல் லைப்பகுதியில் பாக்கிஸ்தான் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்ட தாக இந்தியா கடந்த வியாழக்கிழமை தெரி வித்துள்ளது.