இந்தியா வருகின்றார் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர்

366 Views

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை உடன்பாட்டில் கையொப்பமிடுவதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்  மார்க் எஸ்பர் இந்த மாதம் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவருடன் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் கொம்பியோ (Mike Pompeo ) உட்பட பல அதிகாரிகள் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவிற்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மோதல்கள் வலுவடைந்து வரும் நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை ஒன்று ஏற்பட்டு வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply