இந்தியா தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை நேற்று (26.08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை அடிப்படையிலான நடவடிக்கையாகும்.

FAME  INDIA – 2 திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மையுர் வரை தினசரி நான்கு தடவைகள் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

32 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பேருந்துகள் முழுமையாக குளிர்சாதன வசதியும், தானியங்கிக் கதவுகளும் கொண்டவை. ஜி.பி.எஸ் வசதியும் உள்ளது.

9.3 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் பேருந்து லித்தியம், அயன் மின்கலம் மூலம் இயங்கும். ஒவ்வொரு முறையும் மின்கலம் மாற்றப்பட்டு பேருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கலத்தில் ஒருமுறை மின்சாரம் ஏற்றினால் 40 கிலோமீற்றர் வரை பயணம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 4முறை மின்கலங்களை மாற்றுவதன் மூலம் 200 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்தப் பேருந்தை இயக்க முடியும்.

இந்தப் பேருந்தை தயாரித்த அசோக் லேலான்ட் நிறுவன ஓட்டுனர்களாலேயே இயக்கப்படும்.