Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா தகவல்

இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் அதிகரிப்பு – ஐ.நா தகவல்

இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காவில் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா.  தெரிவித்துள்ளது.

2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. மாநாட்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் முக்கியமாக கொரோனா நெருக்கடிக்கு முன்பிருந்ததை விட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருந்ததாகவும் அதாவது 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3 சதவீதம் அளவுக்கு அதிகமாக இருந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது. கிழக்கு ஆசிய நாடுகளின் வலுவான ஏற்றுமதி செயல்திறனால் இந்த காலாண்டில் வர்த்தகத்தின் மீள் உருவாக்கம் தொடர்ந்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஆண்டில் உலகின் பிற பெரிய பொருளாதாரத்தில் வளர்ந்த  நாடுகளைவிட இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கியதாக ஐ.நா. குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவில் 2020-ம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும், சேவை இறக்குமதி 14 சதவீதமும் அதிகரித்து உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை சரக்கு மற்றும் சேவை முறையே 26 மற்றும் 2 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Exit mobile version