இந்தியாவில் பரவும் திரிபடைந்த கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறிவு

இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் திரிபடைந்த வைரஸ் இலங்கையில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.

திரிபடைந்த B1.617 என்ற கொரோனா வைரசே இவ்வாறு ஒருவரக்குக் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர், கொழும்பு தனிமைப்படுத்தல் மையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் நேற்று மாலை வரை இலங்கையில் 15,500 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 84 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.