இந்தியாவில் நாள்தோறும் 4,12,262பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத பாதிப்பாக 4,12,262பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கொரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,

”இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 23,01,68 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 16,25,13,339பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்றுள்ளது.